இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகமானது திறன் மேம்பாட்டு மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் ஓர் அரச பல்கலைக்கழகம் ஆகும்..


🔴இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தினால் 2020 க.பொ.த உயர்தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.🔴


"2020 A/L" சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கூடிய கற்கைநெறிகள் தொடர்பான விளக்கங்களும் தகைமைகளும்.

(இக்கற்கைநெறிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்) 


🎓🎓DEGREE COURSES🎓🎓

➖➖➖➖➖➖➖➖➖➖

1️⃣) Bsc. in Marine Engineering (Honors)

                              i. Sea Based

                             ii. Shore Based

More details 👇


https://ocu.ac.lk/courses/b-sc-in-marine-engineering/


✅விண்ணப்பிக்க தேவையான

தகைமைகள் 


⭕பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்களின் தேர்வு நடைபெறும். 


⭕2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஒரே தடவையில் ஆகக் குறைந்தது "2C, S" சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும். (இணைந்த கணிதம், பெளதீகவியல், இரசாயனவியல் உள்ளடங்கலாக) இந்த மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். 


⭕க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும். 


✅Entry Requirements

Advanced-levels

🔴Applicants must have passed the G.C.E. advanced level examination with minimum of 2Cs and 1S passes in one sitting within single attempt in mathematical stream (as per UGC norms compatible with IESL requirements).


🔴 Applicants who sat for G.C.E. advanced level within three attempts at the immediate previous year, are eligible to apply


🔴Applications are called from the prospective candidates through the Ocean University website in the relevant year.  Students will be selected based on highest z-scores and You will be required to attend an interview.


➖➖➖➖➖➖➖➖➖➖

2️⃣) Bsc. in Fisheries and Marine Science (General/Honors) 


More details 👇


https://ocu.ac.lk/courses/b-sc-in-fisheries-and-marine-science-general/


🔺பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர் . 


🔺2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடப்பிரிவில்  தோற்றி ஒரே தடவையில் மூன்று படங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்த மாணவர்கள்  விண்ணப்பிக்க முடியும். 


🔺க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.

➖➖➖➖➖➖➖➖➖➖

3️⃣) Bsc.in Oceanography (Honors) 


More details 👇


https://ocu.ac.lk/courses/b-sc-hons-in-oceanography/


🔹பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


🔹2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் / பௌதீக விஞ்ஞானம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்த மாணவர்கள்  விண்ணப்பிக்க முடியும். 


🔹க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.

➖➖➖➖➖➖➖➖➖➖

4️⃣) Bsc.in Maritime Transportation Management and Logistics (Honors)


More details 👇


https://ocu.ac.lk/courses/b-sc-hons-in-maritime-transportation-management-and-logistics/


🔸2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்திருத்தல் வேண்டும். 


🔸உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர். 


🔸க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.

➖➖➖➖➖➖➖➖➖➖

5️⃣) Bsc.in Coastal and Marine resources management. (General/Honors)


More details 👇


https://ocu.ac.lk/courses/b-sc-general-or-honours-degrees-on-coastal-and-marine-resources-management/


🔳2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில்  மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியைப்பெற்றிருத்தல் வேண்டும். 


🔳உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர். 


🔳க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.

➖➖➖➖➖➖➖➖➖➖

6️⃣) B-Tech in Aquaculture and Sea Food Technology(General)


More details 👇


https://ocu.ac.lk/courses/btech-in-aquaculture-and-seafood-technology/


◽இத்துறை சார்ந்த (Aquaculture /Food Technology) NVQ-5 ஆம் மட்ட சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

                     (அல்லது ) 

🔘2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடப்பிரிவில்/உயிரியல் தொழினுட்பவியல்  துறையில் தோற்றி மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்திருத்தல் வேண்டும்.


🔘உளச்சார்பு பரீட்சையின் (Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் . 


🔘க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல்  வேண்டும்.


➖➖➖➖➖➖➖➖➖➖


விண்ணப்பங்கள் யாவும் இணையத்தின் மூலமாக சமர்ப்பிக்கப் படல் வேண்டும். (Online apply) 

உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும்-


http://ocu.ac.lk/ocean-university-of-sri-lanka-application-for-degree-programmes-2019-2020/


சமுத்திரவியல் துறை என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் பிரபல்யம் வாய்ந்த துறையாகவே காணப்படுகிறது. இத்துறையில் வேலைவாய்ப்புகள் பல இடங்களில் பரந்து காணப்படுகின்றன. எமது மாணவர்களின் மனநிலையை குலைக்கும் ஒரு சில சக்திகளினாலும் மாணவர்களின் அச்சத்தினாலும் புதிய துறை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதில் பின்வாங்கிய நிலை காணப்படுகிறது. 

இந் நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கற்கைநெறிகளும் சர்வதேச அளவில் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகிறது. 

 

மேலும் தமிழ் பேசும் மாணவர்களிடம் இது பற்றிய போதிய தெளிவு இன்மையாலும் அவர்களின் வருகை குறைவாக காணப்படுவதால் அனைத்து  மாணவர்களிடமும் இந்த தகவலை கொண்டு சேர்க்கவும்🙂

                 

மேலதிக தகவல்களுக்கு 👇


https://ocu.ac.lk/